Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ டிரைவரை கொன்று உடல் எரிப்பு? புகாரை கண்டு கொள்ளாத போலீஸ்

டிரைவரை கொன்று உடல் எரிப்பு? புகாரை கண்டு கொள்ளாத போலீஸ்

டிரைவரை கொன்று உடல் எரிப்பு? புகாரை கண்டு கொள்ளாத போலீஸ்

டிரைவரை கொன்று உடல் எரிப்பு? புகாரை கண்டு கொள்ளாத போலீஸ்

ADDED : செப் 02, 2025 12:58 AM


Google News
சேலம்:சேலம் மாவட்டம், மேச்சேரி, சக்தி நகரை சேர்ந்த தனபால் மகன் ரவி,28; லாரி டிரைவர். கடந்த 2ல், வேலைக்கு சென்ற இவர், ைஹதராபாத்தில் இறந்து விட்டதாக, 8ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், டிரைவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது தாய் சரோஜா, 12ல், மேச்சேரி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

நேற்று, கணவருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த சரோஜா கூறியதாவது:மேச்சேரி அடுத்த தெத்திகிரிப்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர் சக்தி,40, என்பவரிடம் மகன் வேலை செய்து வந்தார். கடந்த ஆக.,2ல், வேலைக்கு அழைத்து சென்ற நிலையில், 8ம் தேதி உடல்நல குறைவால் மகன் இறந்துவிட்டதாக சக்தி தகவல் தெரிவித்தார்.

ஆனால், மகனின் முகத்தில் காயங்கள் இருந்ததால், அவரை அடித்து கொன்றுவிட்டு, அதை மறைக்க அவசர அவசரமாக, சக்தி ஏற்பாட்டில் மகனின் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.

அதனால், சந்தேக மரணம் என அளித்த புகார் மீது, மேச்சேரி போலீசார் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, மகன் இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us