/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கன மழையால் வேருடன் சாய்ந்த மரம் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி கன மழையால் வேருடன் சாய்ந்த மரம் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
கன மழையால் வேருடன் சாய்ந்த மரம் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
கன மழையால் வேருடன் சாய்ந்த மரம் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
கன மழையால் வேருடன் சாய்ந்த மரம் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 11, 2025 01:06 AM
ஆத்துார், ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு கன மழை பெய்தது. இதனால் சாலை, தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது காமராஜர் சாலையில், மயில் கொன்றை மலர் மரம் வேருடன் சாய்ந்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதை அறிந்த, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், காலை, 7:00 மணிக்கு, மரத்தை சாலையோரம் அகற்றினர். பின் வாகனங்கள் சென்றன. தொடர்ந்து அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
சேலத்தில் 45 மி.மீ., மழை
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, சில இடங்களில் மித மழை பெய்தது. அதிகபட்சமாக சேலத்தில், 45.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஆத்துார், 43.8, தம்மம்பட்டி, 16, கரியகோவில், 15, நத்தக்கரை, 13, ஏத்தாப்பூர், 11, கெங்கவல்லியில், 10 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, வாழப்பாடி, முத்தம்பட்டி, சிங்கிபுரம், ஏத்தாப்பூர், துக்கியாம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கன மழை கொட்டியது.
ஓமலுாரில் நேற்று மாலை, 6:00 மணிக்கு, அரை மணி நேரம் கனமழை பெய்தது. காடையாம்பட்டி யில் சாரல் மழை பெய்தது.