/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பட்டதாரிகள் காதல் திருமணம் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் பட்டதாரிகள் காதல் திருமணம் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
பட்டதாரிகள் காதல் திருமணம் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
பட்டதாரிகள் காதல் திருமணம் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
பட்டதாரிகள் காதல் திருமணம் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
ADDED : செப் 11, 2025 01:06 AM
தாரமங்கலம், தாரமங்கலம், காட்டுக்கொட்டயை சேர்ந்தவர் தினேஷ்குமார், 24. பி.இ., சிவில் படித்துவிட்டு, தனியார் கட்டட கன்சல்டிங்கில் பணிபுரிகிறார். கே.ஆர்.தோப்பூர், குயவனுாரை சேர்ந்தவர் ஜெயசிந்து, 24. பி.இ., முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இருவரும் பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டு, 10 ஆண்டாக காதலித்தனர்.
ஜெயசிந்து பெற்றோர், அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்தனர். இதனால் காதல் ஜோடி, கடந்த, 8ல் வீட்டை விட்டு வெளியேறி, பழநியில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இருவரும் பாதுகாப்பு கேட்டு, தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று தஞ்சம் அடைந்தனர். போலீசார், இருவரது பெற்றோரை அழைத்து பேசினர். ஜெயசிந்துவின் பெற்றோர் சமாதானம் அடையாததால், தினேஷ்குமாரின் பெற்றோருடன், இருவரையும் அனுப்பினர்.
'இன்ஸ்டா' காதல்
இளம்பிள்ளை அருகே வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி ஐயனார், 23. கே.ஆர்.தோப்பூரை சேர்ந்தவர் தமிழ்செல்வி, 21. இருவரும், 'இன்ஸ்டாகிராம்' மூலம் காதலித்த நிலையில், கடந்த, 8ல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
நேற்று பாதுகாப்பு கேட்டு, தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரை அழைத்து பேசினர். தமிழ் செல்வி பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் ஐயனாருடன் அனுப்பிவைத்தனர்.