/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பீச் வாலிபால் போட்டி அரசு பள்ளி 3ம் இடம் பீச் வாலிபால் போட்டி அரசு பள்ளி 3ம் இடம்
பீச் வாலிபால் போட்டி அரசு பள்ளி 3ம் இடம்
பீச் வாலிபால் போட்டி அரசு பள்ளி 3ம் இடம்
பீச் வாலிபால் போட்டி அரசு பள்ளி 3ம் இடம்
ADDED : செப் 10, 2025 02:12 AM
சேலம், சேலம் காந்தி மைதானத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு, பீச் வாலிபால் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. 18 அணிகள் பங்கேற்றன.
திருப்பூர் தனியார் பள்ளி அணி முதலிடம், கோவை தனியார் பள்ளி இரண்டாமிடம், சேலம், வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பிடித்தன. நேற்று பள்ளி மாணவிகளுக்கு, பீச் வாலிபால் போட்டி நடந்தது. ஈரோடு தனியார் பள்ளி, முதல் மற்றும் 3ம் இடமும், கோவை தனியார் பள்ளி, 2ம் இடமும் பிடித்தன. 46 அணிகள் பதிவு செய்தபோதும், 6 அணிகள் மட்டும் பங்கேற்றன.
அதேபோல் மாணவர்கள் போட்டியிலும், 164 அணிகள் பதிவு செய்த நிலையில், 18 அணிகள் மட்டும் விளையாடின. இன்று பீச் வாலிபால் போட்டி, கல்லுாரி மாணவர்களுக்கும், நாளை மாணவிகளுக்கும் நடக்கிறது என, விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.