Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆகஸ்டில் வாகன சோதனை 67 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

ஆகஸ்டில் வாகன சோதனை 67 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

ஆகஸ்டில் வாகன சோதனை 67 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

ஆகஸ்டில் வாகன சோதனை 67 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

ADDED : செப் 10, 2025 02:11 AM


Google News
சேலம், சேலம் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில், சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்துார், சங்ககிரி, மேட்டூர், தர்மபுரியில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஓமலுார், வாழப்பாடி, பாலக்கோடு, அரூரில் பகுதி நேர அலுவலகங்கள் உள்ளன.

கடந்த ஆகஸ்டில், 11 அலுவலக பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் குழுவினர் நடத்திய சோதனையில், சாலை விதிகளை மீறிய, 67 பேரின் ஓட்டுனர் உரிமத்தை, தற்காலிக ரத்து செய்தனர்.

முகப்பு விளக்கை அதிக வெளிச்சத்துடன் ஒளிர விட்டது, சிக்னலை தாண்டியது, அதிக சத்தம் எழுப்பிய ஏர்ஹாரன் போன்று பல்வேறு விதிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, 57.06 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 22.89 லட்சம் ரூபாய் உடனே வசூலிக்கப்பட்டது.

அவற்றில் அதிகபட்சமாக சீட் பெல்ட் அணியாத, 160 பேர், அதிக பயணியர் ஏற்றியது தொடர்பாக, 160 பேர், ெஹல்மெட் அணியாத, 137 பேர், அதிக பாரம் ஏற்றிய, 94 பேர், மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள், 93 பேர், போதையில் வாகனம் ஓட்டிய இருவர் அடங்கும்.

மேலும், 35.19 லட்சம் ரூபாய் சாலை வரி வசூலானது. தகுதிச்சான்று(எப்.சி.,), அனுமதி சீட்டு (பர்மிட்) இல்லாத, 169 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது என, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us