/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கீழ் காலனி பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு, தனியார் பஸ் சிறை பிடிப்பு கீழ் காலனி பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு, தனியார் பஸ் சிறை பிடிப்பு
கீழ் காலனி பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு, தனியார் பஸ் சிறை பிடிப்பு
கீழ் காலனி பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு, தனியார் பஸ் சிறை பிடிப்பு
கீழ் காலனி பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு, தனியார் பஸ் சிறை பிடிப்பு
ADDED : ஜூன் 13, 2025 01:50 AM
பள்ளிப்பாளையம், கீழ் காலனி பஸ் ஸ்டாப் பகுதியில் நிற்காமல் சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்சை, அப்பகுதி மக்கள் வழிமறித்து சிறை பிடித்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே, கீழ்காலனி பகுதியில் பஸ் ஸ்டாப் உள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து, எஸ்.பி.பி., காலனி வழித்தடத்தில் இயக்கும் டவுன் பஸ் அனைத்தும் கீழ் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல வேண்டும்.
ஆனால், எந்த பஸ்சும் நிற்பதில்லை. கீழ்காலனி பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள நிழற்கூடத்தில், அப்பகுதி மக்களும் பஸ்சுக்காக காத்திருப்பர், ஆனால் பஸ் நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் அப்பகுதி அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை, 6:00 மணியளவில் அந்த வழியாக சென்ற தனியார், அரசு பஸ்சை சிறை பிடித்தனர். இது குறித்து கவுன்சிலர் திருவேங்கடம் கூறுகையில்,'' கீழ்காலனி பஸ் ஸ்டாப்பில் தனியார், அரசு டவுன் பஸ்கள் அனைத்தும் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.
ஆனால் இந்த வழித்தடத்தில் செயல்படும் அரசு, தனியார் பஸ் எதுவுமே பஸ் ஸ்டாப்பில் நிற்பதில்லை. வேலைக்கு செல்வோர், கல்லுாரி, பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே பஸ்களை சிறை பிடித்தோம். இதையடுத்து இனிமேல், கீழ்காலனி பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்று செல்லும் என, டிரைவர்கள் உறுதி அளித்தனர். இதன் பின்பு கலைந்து சென்றோம்,'' என்றார்.