மல்லுாரில் 207 பேருக்கு இலவச பட்டா
மல்லுாரில் 207 பேருக்கு இலவச பட்டா
மல்லுாரில் 207 பேருக்கு இலவச பட்டா
ADDED : ஜூன் 13, 2025 01:46 AM
பனமரத்துப்பட்டி, மல்லுார் டவுன் பஞ்சாயத்து, 15 வது வார்டு பனங்காட்டில், நேதாஜி சுபாஷ் சமத்துவ நகர் உள்ளது. அங்கு, 150க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசிக்கின்றனர். நேற்று சேலத்தில், முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில், நேதாஜி சுபாஷ் சமத்துவ நகரை சேர்ந்த, 154 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
மேலும் மல்லுார் டவுன் பஞ்சாயத்து வேங்காம்பட்டி, வெற்றி நகரை சேர்ந்தவர்களுக்கும் பட்டா வழங்கப்பட்டது. இதன்மூலம் மல்லுாரில் மட்டும், 207 பேருக்கு இலவச பட்டா கிடைத்தது.