Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/வாடகைக்கு ஓட்டுவதாக வாங்கி காரை அடகு வைத்து மோசடி

வாடகைக்கு ஓட்டுவதாக வாங்கி காரை அடகு வைத்து மோசடி

வாடகைக்கு ஓட்டுவதாக வாங்கி காரை அடகு வைத்து மோசடி

வாடகைக்கு ஓட்டுவதாக வாங்கி காரை அடகு வைத்து மோசடி

ADDED : பிப் 25, 2024 03:39 AM


Google News
சேலம்: சேலம், அழகாபுரம், அத்வைத ஆசிரம சாலை, லட்சுமி தெருவை சேர்ந்தவர் ரஹமத்துல்லா, 65. இவர் சொந்தமாக, 'எர்டிகா' கார் வைத்திருந்தார். இவரது நண்பரான, சேலம், சூரமங்கலம் ரயில் நகரை சேர்ந்த சுப்ரமணி, காரை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து கொடுப்பதாக கூறினார். அதை நம்பிய ரஹமத்துல்லா, 2023 அக்., 3ல் காரை ஒப்படைத்தார்.

சுப்ரமணி காரை எடுத்துச்சென்று, நண்பர் உதவியுடன் சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பின் பலமுறை கேட்டும் காரை ஒப்படைக்கவில்லை. மாறாக, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு சுப்ரமணியின் மனைவி அன்பரசியும் உடந்தையாக இருந்ததாக, ரஹமத்துல்லா அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணைக்கு பின், மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சுப்ரமணி - அன்பரசி மீது வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us