/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வாலிபரை கொன்ற வழக்கு மேலும் 4 பேருக்கு 'காப்பு' வாலிபரை கொன்ற வழக்கு மேலும் 4 பேருக்கு 'காப்பு'
வாலிபரை கொன்ற வழக்கு மேலும் 4 பேருக்கு 'காப்பு'
வாலிபரை கொன்ற வழக்கு மேலும் 4 பேருக்கு 'காப்பு'
வாலிபரை கொன்ற வழக்கு மேலும் 4 பேருக்கு 'காப்பு'
ADDED : செப் 21, 2025 01:16 AM
சேலம், சேலம், திருமலைகிரி, இடும்பன் வட்டத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 20. வேடுகாத்தான்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன், 32. இவர்கள் இடையே, சில மாதங்களுக்கு முன் பண்டிகையின்போது மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த, 16ல், மோகன்ராஜ், அவரது நண்பர் சிவானந்தம் ஆகியோரை, ஒரு கும்பல் கத்தி, கட்டையால் தாக்கினர். படுகாயம் அடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இரும்பாலை போலீசார் வழக்குப்பதிந்து, 8 பேரை கைது செய்தனர். நேற்று முன்தினம் மோகன்ராஜ் உயிரிழந்தார். உடலை பெற மறுத்து உறவினர்கள், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து கொலை வழக்காக மாற்றிய போலீசார், நேற்று, வேடுகாத்தாம்பட்டி, பாறை வட்டத்தை சேர்ந்த பசுபதி, 19, அன்பழகன், 20 மற்றும், 17 வயதுடைய இரு சிறுவர்கள் என, 4 பேரை கைது செய்தனர்.