/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயிலில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் பஸ்சில் கடத்திய 2 பேருக்கு 'காப்பு' ரயிலில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் பஸ்சில் கடத்திய 2 பேருக்கு 'காப்பு'
ரயிலில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் பஸ்சில் கடத்திய 2 பேருக்கு 'காப்பு'
ரயிலில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் பஸ்சில் கடத்திய 2 பேருக்கு 'காப்பு'
ரயிலில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் பஸ்சில் கடத்திய 2 பேருக்கு 'காப்பு'
ADDED : செப் 21, 2025 01:11 AM
சேலம்:சேலம் வழியே வந்த ரயிலில், 30 கிலோ கஞ்சா, கேட்பாரற்று கிடந்த நிலையில், போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் அரசு பஸ்சில், 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், நேற்று அதிகாலை சேலம் வந்த தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப்பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது இரு பைகள் கேட்பாரற்று கிடந்தன. பரிசோதனை செய்ததில், 30 கிலோ கஞ்சா இருந்தது.
அங்கிருந்த யாரும் உரிமை கோரவில்லை. இதனால் கஞ்சாவை, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் சேலம் மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து வந்த அரசு பஸ்சில் ஆய்வு நடத்தினர். அப்போது அதில் வந்த, நாமக்கல் மாவட்டம் பாவடி, வேட்டம்பாடியை சேர்ந்த பிரசாத், 23, விஜய், 19, ஆகியோர், 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்று கஞ்சா வாங்கி, சென்னை வழியே சேலம் வந்து, நாமக்கல் செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.