/உள்ளூர் செய்திகள்/சேலம்/வாடிவாசலில் தீ; காளை உரிமையாளர்கள் தர்ணா: பரபரப்புக்கு இடையே ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்வாடிவாசலில் தீ; காளை உரிமையாளர்கள் தர்ணா: பரபரப்புக்கு இடையே ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்
வாடிவாசலில் தீ; காளை உரிமையாளர்கள் தர்ணா: பரபரப்புக்கு இடையே ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்
வாடிவாசலில் தீ; காளை உரிமையாளர்கள் தர்ணா: பரபரப்புக்கு இடையே ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்
வாடிவாசலில் தீ; காளை உரிமையாளர்கள் தர்ணா: பரபரப்புக்கு இடையே ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்
ADDED : பிப் 24, 2024 04:52 PM
ஆத்துார் : வாடிவாசலில் லேசான தீ விபத்து ஏற்பட்டு உடனே அணைக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் காளைகளை அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் காளை உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த பரபரப்புக்கு இடையே நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி, 20 பேர் காயம் அடைந்தனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் அடுத்த உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. சேலம் டி.ஆர்.ஓ., மேனகா, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை தொடங்கி வைத்தனர். காலை, 8:30 மணிக்கு கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. தொடர்ந்து வாடிவாசல் வழியே காளைகளை அவிழ்த்துவிட்டனர். 4 பிரிவுகளாக, 400 வீரர்கள் களமிறங்கினர்.காளைகளுக்கு, 20,000 முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்த காளைகளை, வீரர்கள் பிடிக்க முடியாமல் திணறினர். மதியம், 2:00 மணிக்கு வாடிவாசல் முன் போடப்பட்டிருந்த தேங்காய் நார் கழிவுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். அங்கிருந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், உடனே தீயை அணைத்தனர். இதனால், 20 நிமிடத்துக்கு பின் மீண்டும் ஜல்லிக்கட்டு நடந்தது.ஆனால், 2:30 மணிக்கு, காளைகளை அவிழ்த்து விடுவதில், அதன் உரிமையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சில உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேச்சு நடத்தி, 'டோக்கன்' அடிப்படையில் காளைகளை விடுவதாக கூறியதால் சமாதானம் அடைந்தனர்.பின் மதியம், 3:30க்கு மீண்டும் ஜல்லிக்கட்டு நடந்தது. 4:40 மணி வரை, 460 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பிடிபடாத காளை, காளைகளை அடக்கிய வீரர்களுக்கு காஸ் அடுப்பு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. அதேநேரம் சேந்தமங்கலம் வீரர் ஆகாஷ், 23, வாழப்பாடி கார்த்தி, 24, வாழப்பாடி காளை உரிமையாளர் ரமேஷ், 35, பார்வையாளர் ராஜேந்திரன், 30, சுரேஷ், 32, உள்பட, 20 பேர், காளைகள் முட்டியதில் அடைந்தனர். மேலும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் தீ வைத்தவர்கள் குறித்து, தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.