/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் சங்கம் வரும் 22ல் ஆர்ப்பாட்டம் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் சங்கம் வரும் 22ல் ஆர்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் சங்கம் வரும் 22ல் ஆர்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் சங்கம் வரும் 22ல் ஆர்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் சங்கம் வரும் 22ல் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 17, 2025 01:58 AM
சேலம் :பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வரும், 22ல் ஆவின் பால் பண்ணை முன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக விவசாயிகள், அன்றாட தேவைகளுக்காக ஒரு பகுதியாக கால்நடைகளை வளர்த்து பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளுக்கான அடர் தீவனம், உலர் தீவனம், பசுந்தீவனங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கால்நடைகளின் பராமரிப்பு மற்றும் வேலை ஆட்களின் கூலி உயர்ந்து விட்ட நிலையில், ஆவின் ஒன்றியங்களில் பசும்பால் லிட்டர், 35 ரூபாய், ஊக்கத்தொகை 3 ரூபாய் என மொத்தம் 38ம், எருமைப்பால் லிட்டர் 45 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
கால்நடை தீவனம், பராமரிப்பு செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதால், ஆவின் ஒன்றியங்கள் தமிழக விவசாயிகளிடம் இருந்து, தற்போது பால் கொள்முதல் செய்யும் விலையில் இருந்து லிட்டருக்கு, 15 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு வழங்கக்கோரி, வரும், 22ல் சேலம் ஆவின் பால் பண்ணை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.