அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள்
அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள்
அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள்
ADDED : ஜூலை 16, 2024 02:03 AM
சேலம்: சேலம் மாவட்ட அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், நேற்று காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினத்தை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நேற்று சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில், காம-ராஜர் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்-டது.
காமராஜர் குறித்து கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்-பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் கல்லுாரி-களிலும், காமராஜர் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.* சேலம் மேற்கு மாவட்ட காங்., கமிட்டி, நங்கவள்ளி வட்டாரம் சார்பில் கோனுார் பிரிவில் உள்ள காமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். மேற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமையில், பொதுச்செயலர் குணசேகர், ஐ.என்.டி.யூ.சி., மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட பொதுச்செயலர் நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, தலைமையாசிரியர் இளங்கோ தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் காமராஜர் படத்துக்கு மாலை அணி-வித்து மரியாதை செலுத்தி 'கல்வி வளர்ச்சி நாள்' உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளியில், தலைமையாசிரியை யோகேஸ்வரி தலை-மையில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* பனமரத்துப்பட்டியில், காங்., சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் செல்வ-குமார் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் தேவி பிரீத்தா, காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.பனமரத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நோட்டு, பென்சில் வழங்-கினர். நகர தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி தலைவர் ராஜீவ்-காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* தாரமங்கலம் காங்., சார்பில் நகரத்தலைவர் சண்முகம் தலைமை யில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றினர். அங்கிருந்து ஊர்வலமாக சென்று, சங்ககிரி சாலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணி-வித்து வணங்கி, இனிப்பு வழங்கினர்.