விபத்தை பார்க்க சென்ற டிரைவர் மரணம்
விபத்தை பார்க்க சென்ற டிரைவர் மரணம்
விபத்தை பார்க்க சென்ற டிரைவர் மரணம்
ADDED : மே 25, 2025 02:19 AM
ஆத்துார்:சென்னை, சோமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 35. இவர், 'ஸ்கோடா' காரில் இரு நண்பர்களுடன், சேலத்தில் இருந்து ஆத்துார் புறவழிச்சாலை வழியே சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.
சந்தனகிரி புறவழிச்சாலையில், 7:30 மணிக்கு சென்றபோது, நாய் குறுக்கே புகுந்ததால் திடீர் 'பிரேக்' போட்டுள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. இதில் மூவரும் காயத்துடன் தப்பினர்.
இந்நிலையில், ஆத்துார், கல்லாநத்தத்தை சேர்ந்த லோகேஷ், 23, மினி வேனில் அவ்வழியே சென்றபோது , கார் விபத்தை பார்க்க சாலையை கடக்க முயன்றார். அப்போது, சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற சுற்றுலா வேன் மோதியதில் பலியானார்.