Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கர்ப்பிணி சாவில் சந்தேகம்; கணவர், மாமியார் மீது வழக்கு

கர்ப்பிணி சாவில் சந்தேகம்; கணவர், மாமியார் மீது வழக்கு

கர்ப்பிணி சாவில் சந்தேகம்; கணவர், மாமியார் மீது வழக்கு

கர்ப்பிணி சாவில் சந்தேகம்; கணவர், மாமியார் மீது வழக்கு

ADDED : ஜூலை 11, 2024 04:19 AM


Google News
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சின்னபுனல்வாசலை சேர்ந்த, அழகுவேல் மகன் பிரதீஷ்குமார், 30. இவர் பெங்களூ-ருவில் கணினி இன்ஜினியராக பணிபுரிகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த வேலு மகள் கவியரசி, 24. இவரை, கடந்த ஜனவரியில் பிரதீஷ்-குமார் திருமணம் செய்து கொண்டார். கவியரசி, 5 மாத கர்ப்பிணி-யாக இருந்த நிலையில் கணவருடன் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 8ல் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், கவியரசி வீட்டில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். கவியரசியின் பெற்றோர், மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். கெங்கவல்லி போலீசார் சமாதானப்படுத்திய பின், பிரேத பரிசோ-தனை செய்யப்பட்டு, உடலை பெற்றுக்கொண்டனர். அவர்கள் புகார்படி, போலீசார் விசாரித்து, பிரதீஷ்குமார், அவரது தாய் தங்க-மணி, அவரது தங்கை பிரதீபா மீது சந்தேக மரண வழக்கு பதிந்-தனர். ஆத்துார் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us