ADDED : ஜூலை 11, 2024 04:20 AM
சேலம்: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபு-ரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு கலந்தாய்வு கடந்த, 8ல் தொடங்கியது. நேற்று பட்டதாரி ஆசிரியர்-களுக்கு, மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு, சிறுமலர் மேல்-நிலைப்பள்ளியில் நடந்தது. அதில் பங்கேற்க, 721 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 542 பேர் பங்கேற்றனர். அதில், 109 பேர், விருப்ப இடத்தை தேர்வு செய்து இடமாறுதல் பெற்-றனர். அவர்களுக்கான ஆணையை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் வழங்கினார். இன்று மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்-தாய்வு தொடங்கி, வரும், 20 வரை நடக்கிறது.