Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 11, 2024 12:56 AM


Google News
சேலம்: சேலம், சூரமங்கலம் மண்டல அலுவலகம் முன், இ.கம்யூ., சார்பில் அரியாகவுண்டம்பட்டியில் நீர்வழி ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் மண்டல செயலர் அசோக்குமார் தலைமை வகித்து பேசியதாவது: அரியாகவுண்டம்பட்டியில் உள்ள நீர்வழி ஓடைக்கு மாங்குப்பை, மல்லமூப்பன்பட்டி, காமநாயக்கன்பட்டி பகுதிகளில் இருந்து மழைநீர் வருகிறது. இந்த ஓடையை, 1 கி.மீ.,க்கு, 64 சென்ட் பரப்பில் சிலர் சிமென்ட் கலவை கொட்டி ஆக்கிரமித்து வருகின்-றனர். இதுவரை, 50 அடியாக இருந்த ஓடை அகலம், தற்போது, 10 அடியாக சுருங்கியுள்ளது. உடனே அகற்றி, நீர்வழி ஓடையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட செயலர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள், மக்கள் பங்-கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us