மனைவிக்கு வெட்டு கணவருக்கு 'காப்பு'
மனைவிக்கு வெட்டு கணவருக்கு 'காப்பு'
மனைவிக்கு வெட்டு கணவருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 24, 2024 07:41 AM
வாழப்பாடி : வாழப்பாடி, சென்றாயன்பாளையத்தை சேர்ந்தவர் வைத்திய-லிங்கம், 71.
இவரது மனைவி சின்னபொண்ணு, 55. இவரது நடத்தையில் சந்தேகப்பட்ட வைத்தியலிங்கம், நேற்று முன்தினம் தகராறில் ஈடுபட்டார். அப்போது கொடுவாளால் சின்ன பொண்-ணுவை வெட்ட முயன்றார். தடுத்த சின்னபொண்ணுக்கு கையில் வெட்டு விழுந்ததால், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் தடுக்க முயன்ற சின்ன பொண்ணுவின் உறவினர் ராஜேந்திரன் மீதும் வெட்டு விழுந்து, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராஜேந்திரன் புகார்படி, வாழப்பாடி போலீசார், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில், நேற்று முன்தினம் வைத்தியலிங்கத்தை கைது செய்தனர்.