/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாடியில் இருந்து விழுந்த கட்டட தொழிலாளி சாவு மாடியில் இருந்து விழுந்த கட்டட தொழிலாளி சாவு
மாடியில் இருந்து விழுந்த கட்டட தொழிலாளி சாவு
மாடியில் இருந்து விழுந்த கட்டட தொழிலாளி சாவு
மாடியில் இருந்து விழுந்த கட்டட தொழிலாளி சாவு
ADDED : செப் 12, 2025 02:26 AM
சேலம், சேலம் சிவதாபுரம், பட்டைக்காரன்தெருவை சேர்ந்த வடிவேல், 46, கட்டட தொழிலாளி. இவர் சேலம் இரும்பாலை அருகே, தளவாய்பட்டி பொத்தனுார் பகுதியில் பழனிசாமி என்பவரின் அடுக்கு மாடி வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இவரது கட்டடத்தில் மேஸ்திரி ராஜமாணிக்கம் என்பவருடன், வடிவேல் வேலை செய்து வந்தார். நேற்று காலை கட்டடத்தின் இரண்டாவது மாடியின் சாரத்தில் அமர்ந்தபடி, கலவை போடும் வேலை செய்து வந்தார். அப்போது எதிர்பாரத விதமாக தவறி கீழே விழுந்து, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இரும்பாலை போலீசார், வடிவேல் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வடிவேல் மனைவி பத்மேஸ்வரி, 36, கொடுத்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.