/உள்ளூர் செய்திகள்/சேலம்/நன்னடத்தை கைதிகளுக்கு கணினி பயிற்சி தொடக்கம்நன்னடத்தை கைதிகளுக்கு கணினி பயிற்சி தொடக்கம்
நன்னடத்தை கைதிகளுக்கு கணினி பயிற்சி தொடக்கம்
நன்னடத்தை கைதிகளுக்கு கணினி பயிற்சி தொடக்கம்
நன்னடத்தை கைதிகளுக்கு கணினி பயிற்சி தொடக்கம்
ADDED : ஜூலை 10, 2024 07:12 AM
சேலம்: சேலம் மத்திய சிறையில் நன்னடத்தை கைதிகளுக்கு கணினி பயிற்சி வகுப்பு, நேற்று தொடங்கப்பட்டது.
சிறை எஸ்.பி., வினோத், கணினி பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:கணினி பயிற்சி மையத்தில், எம்.எஸ்.வேர்டு, எக்ஸல், பவர்பாயின்ட், போட்டோஷாப், பிரின்டிங், ஜெராக்ஸ், ஸ்கேனிங் உள்ளிட்ட அடிப்படை கணினி பயிற்சி கற்றுத்தரப்படும். ஆர்வமுள்ள கைதிகள் அனுமதிக்கப்படுவர். தேர்ந்தெடுத்த, கணினி திறன் வாய்ந்த சிறை போலீசார் மூலம் கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஞாயிறு தவிர மற்ற நாட்கள், மையம் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் 40 கைதிகள் பயன்பெற்றனர். சிறை நல அலுவலர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.