/உள்ளூர் செய்திகள்/சேலம்/21 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா; வெறும் 5 அடி மட்டும் இழுத்த பரிதாபம் 21 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா; வெறும் 5 அடி மட்டும் இழுத்த பரிதாபம்
21 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா; வெறும் 5 அடி மட்டும் இழுத்த பரிதாபம்
21 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா; வெறும் 5 அடி மட்டும் இழுத்த பரிதாபம்
21 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா; வெறும் 5 அடி மட்டும் இழுத்த பரிதாபம்
ADDED : ஜூலை 25, 2024 01:13 AM
கெங்கவல்லி: அருங்காட்டம்மன் கோவில் தேர் திருவிழா, 21 ஆண்டுகளுக்கு பின் நடந்த நிலையில், வெறும், 5 அடி மட்டுமே, பக்தர்கள் இழுத்து முடித்துக்கொண்டனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலுாரில் அருங்காட்-டம்மன், பெரிய அம்மன், சின்ன அம்மன், கைலாசநாதர் கோவில்கள் உள்ளன. அங்கு, 2004ல் தேர் திருவிழாவின்போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு திருவிழா நிறுத்தப்-பட்டது. இந்நிலையில் அனைத்து பிரிவினரும் திருவிழா நடத்த முன் வந்தனர். இதுதொடர்பாக பேச்சு நடத்தி, 21 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த, 19ல் சக்தி அழைத்தலுடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம், ஒரு பிரிவை சேர்ந்த மக்கள், பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, முதல்முறை அங்கு வழிபட்டனர். தொடர்ந்து ஊரணி பொங்கல் நடந்தது.
நேற்று காலை, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 5:00 மணிக்கு, இந்து சமய அறநிலையத்-துறை இணை கமிஷனர் விமலா, மரத்தேரின் உறுதித்தன்மையை பார்வையிட்டார்.
சக்கரம் வலுவாக இல்லாததால், 10 அடி துாரம் மட்டும் இழுத்-துச்செல்லுங்கள் என, விமலா அறிவுறுத்தினார். 6:30 மணிக்கு, அருங்காட்டம்மன், பெரிய அம்மன், சின்ன அம்மன் சுவாமி சிலைகளை, தேர் மீது வைத்து வழிபட்டனர். இரவு, 7:40 மணிக்கு, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் முன்னி-லையில் விழா குழுவினர், தேரை இழுத்தனர். 40 அடி உயர தேர் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், 5 அடி மட்டும் இழுத்து நிறுத்திவிட்டனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
காரணம் என்ன?
விழா குழுவினர் கூறியதாவது: கடந்த, 20 ஆண்டுகளாக தேர் பயன்பாடின்றி நிறுத்தப்பட்டிருந்-தது. இதனால் மரத்தில் செய்யப்பட்ட, 4 சக்கரங்களும் சேதமாகி இருந்தன. புதிதாக சக்கரம் அமைக்க, திருச்சி 'பெல்' நிறுவனத்-துக்கு சென்றோம். வடிமைக்க, 6 மாதங்களாகும் என்றனர். இதனால் அடுத்தாண்டு புதிதாக இரும்பு சக்கரம் பொருத்திய தேர் செய்ய முடிவு செய்தோம். மேலும் இந்தாண்டில், அனைத்து பிரிவினரும் விழா நடத்த ஒப்புக்கொண்டதால், சேதமடைந்த தேரை, சிறிது துாரம் மட்டும் இழுத்து விழா நடத்த, அறநிலை-யத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர். அதன்படி திருவிழா நடந்-தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.