Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு அழைப்பு

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு அழைப்பு

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு அழைப்பு

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு அழைப்பு

ADDED : ஜூன் 02, 2025 06:44 AM


Google News
சேலம்,: திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில் சேலம், 4 ரோடு, சாமுண்டி வளாகத்தில், வரும், 9 முதல், 18 வரை, தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடக்க உள்ளது.

இதில் தங்கம் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரைகல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். 18 வயது நிரம்பிய இருபாலரும் பங்கேற்கலாம். குறைந்தது, 8-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். பயிற்சி முடிவில், இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். இதையடுத்து தேசிய கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் சேரலாம். அதனால் பயிற்சியில் சேர விரும்புவோர், மார்பளவு புகைப்படம் - 3, முகவரி, கல்வி சான்றிதழ்களுடன், பயிற்சி கட்டணம், 7,500 ரூபாய் செலுத்த வேண்டும். விபரம் பெற, 94437 28438 என்ற எண்ணில் அழைக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us