ADDED : ஜூன் 01, 2025 01:48 AM
காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்த, கொத்தனார் சின்னசாமி, 55. நேற்று காலை, 9:00 மணிக்கு, மின்னாம்பள்ளி அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க நடந்து சென்றார்.
அப்போது சேலம் நோக்கி வந்த, 'பல்சர்' பைக், சின்னசாமி மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மதியம், அவர் உயிரிழந்தார். அவரது மனைவி பழனியம்மாள் புகார்படி, காரிப்பட்டி போலீசார், பைக்கில் மோதியவரிடம் விசாரிக்கின்றனர்.