/உள்ளூர் செய்திகள்/சேலம்/பாய்லர் குழாய் பழுது: 600 மெகாவாட் உற்பத்தி பாதிப்புபாய்லர் குழாய் பழுது: 600 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு
பாய்லர் குழாய் பழுது: 600 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு
பாய்லர் குழாய் பழுது: 600 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு
பாய்லர் குழாய் பழுது: 600 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு
ADDED : ஜூன் 19, 2024 06:28 AM
மேட்டூர் : மேட்டூர், 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தில் பாய்லர் குழாய் பழுதடைந்ததால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.மேட்டூரில், 840 மெகாவாட், 600 மெகாவாட் அனல்மின் நிலையங்கள் உள்ளன.
இதில், 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு பாய்லர் குழாய் பழுதடைந்ததால், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதித்தது.தமிழகத்தில், மேட்டூர், துாத்துக்குடி, வடசென்னை உள்ளிட்ட அனல்மின் நிலையங்களில் மொத்தம், 5,120 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். நேற்று முன்தினம், 3,416 மெகாவாட் மின் உற்பத்தி செய்த நிலையில், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதித்ததால் நேற்று, 3,093 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.