Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தமிழகத்துக்கு தொல்லை தரும் பா.ஜ., சுற்றுலா துறை அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்துக்கு தொல்லை தரும் பா.ஜ., சுற்றுலா துறை அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்துக்கு தொல்லை தரும் பா.ஜ., சுற்றுலா துறை அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்துக்கு தொல்லை தரும் பா.ஜ., சுற்றுலா துறை அமைச்சர் குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 03, 2025 02:14 AM


Google News
சேலம்,

சேலம், அம்மாபேட்டை பகுதி தி.மு.க., சார்பில், அங்குள்ள காந்தி மைதானத்தில், 'ஓரணியில் தமிழ்நாடு' தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மத்திய மாவட்ட செயலரான, அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்துக்கான நிதியில், எந்தெந்த துறையில் எவ்வளவு குறைக்க முடியும் என்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. எனினும் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம், 9.6 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

பா.ஜ.,வால் இழைக்கப்படும் அநீதியை எதிர்த்தே, தமிழகத்தை ஓரணியில் கொண்டு வரும் முயற்சியில், முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். தமிழகத்துக்கு அதிக தொல்லை தரும், பா.ஜ.,வுக்கு, அ.தி.மு.க., எடுபிடியாக இருந்து, அவர்களுக்கு ஆதரவாக, இ.பி.எஸ்., செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அம்மாபேட்டை காமராஜர் வளைவில் இருந்து, அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டு, பொதுக்கூட்ட திடலை அடைந்தனர். மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மண்டல குழு தலைவர் தனசேகர், மாநகர் செயலர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

அதேபோல், சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் இடைப்பாடியில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், மேற்கு மாவட்ட செயலரான, எம்.பி., செல்வகணபதி பேசுகையில், ''புயல் நிதி, கல்வி நிதி, நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்ட நிதி என எதையும் தராமல் மோடி வஞ்சித்து வருகிறார். அதனால் முதல்வர் ஸ்டாலின், 'ஓரணியில் தமிழகம்' என்ற கொள்கை பிடிப்போடு செயல்படுகிறார்,'' என்றார்.

நகராட்சி தலைவர் பாஷா, தலைமை பேச்சாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பிருந்து நைனாம்பட்டி வழியே பஸ் ஸ்டாண்ட் வரை, பேரணியாக நடந்து வந்தனர்.

'முழு நேர ஜோதிடர்கள்'

சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்துார், ராணிப்பேட்டையில் பொதுக்கூட்டம் நடந்தது.

அதில், கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசுகையில், ''பா.ஜ., கட்சினர், முழு நேர ஜோதிடர்களாக மாறி பேசி வருகின்றனர். பா.ஜ.,வினர் ஜோதிடம் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படி பேசி தான், அ.தி.மு.க.,வை முடித்துவிட்டனர். அ.தி.மு.க., என்ற கட்சியே இல்லாமல் போவதற்கு, பா.ஜ., வழி செய்து வருகிறது,'' என்றார்.

மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், எம்.பி., மலையரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us