/உள்ளூர் செய்திகள்/சேலம்/பக்தர்கள் காத்திருப்பு கூடத்துக்கு பூமி பூஜைபக்தர்கள் காத்திருப்பு கூடத்துக்கு பூமி பூஜை
பக்தர்கள் காத்திருப்பு கூடத்துக்கு பூமி பூஜை
பக்தர்கள் காத்திருப்பு கூடத்துக்கு பூமி பூஜை
பக்தர்கள் காத்திருப்பு கூடத்துக்கு பூமி பூஜை
ADDED : ஜூலை 16, 2024 02:03 AM
தலைவாசல்: ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில் ரூ.45 லட்சத்தில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.
தலைவாசல் அருகே, ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோவில் உள்-ளது. இங்கு வேறெங்கும் இல்லாத வகையில், எட்டு திசைக-ளிலும் கால பைரவர் சிலைகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமி நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்-றனர். தவிர, ஞாயிறுக்கிழமை மாலை நேரத்தில் ராகுகால பூஜை-யிலும் பங்கேற்கின்றனர். பக்தர்கள் நலன் கருதி கெங்கவல்லி தொகுதி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பக்தர்கள் காத்திருப்பு கூடம் கட்டுவதற்கு, 45 லட்சம் ரூபாய் நிதியை எம்.எல்.ஏ., நல்லதம்பி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான பூமி பூஜை நேற்று, அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., நல்லதம்பி, தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராம-சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.