Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சிக்கம்பட்டியில் 'மக்களுடன் முதல்வர்' முகாமில் பெறப்பட்ட 562 மனுக்கள்

சிக்கம்பட்டியில் 'மக்களுடன் முதல்வர்' முகாமில் பெறப்பட்ட 562 மனுக்கள்

சிக்கம்பட்டியில் 'மக்களுடன் முதல்வர்' முகாமில் பெறப்பட்ட 562 மனுக்கள்

சிக்கம்பட்டியில் 'மக்களுடன் முதல்வர்' முகாமில் பெறப்பட்ட 562 மனுக்கள்

ADDED : ஜூலை 16, 2024 02:03 AM


Google News
ஓமலுார்: சிக்கம்பட்டியில் நடந்த, மக்களுடன் முதல்வர் முகாமில், 562 மனுக்கள் பெறப்பட்டன.

சேலம் மாவட்டம், ஓமலுார் ஒன்றியம், சிக்கம்பட்டியில் உள்ள ஏ.சி.எஸ்., திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடந்தது. பச்சனம்பட்டி, பெரியேரிப்பட்டி, சிக்கம்பட்டி ஆகிய ஊராட்சி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்-பட்டது. ஓமலுார் பி.டி.ஓ.,க்கள் உமாசங்கர், நல்லதம்பி ஆகியோர் தலைமையில் நடந்த முகாமில், பல்வேறு துறை சார்பில் அலுவ-லர்கள் பங்கேற்று, 562 மனுக்கள் பெற்றனர். பொதுமக்கள் வசதிக்-காக இ-சேவை மையம் அமைக்கப்பட்டிருந்து.

முகாமை கலெக்டர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு செய்தார். அவ-ரிடம் பலர் பட்டா கேட்டு மனு வழங்கினர். சேலம் எம்.பி., செல்-வகணபதி, ஓமலுார் வடக்கு எம்.எல்.ஏ., ராஜேந்திரன், தி.மு.க., ஒன்-றியசெயலர் செல்வகுமரன், ஒன்றிய கவுன்சிலர் குப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர். கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வருவதற்கு முன்பாக, மண்ட-பத்தின் வெளியே சிலர் பணம் வாங்கிக் கொண்டு மனுக்களை எழுதி கொடுத்தனர். அதை கவனித்த பி.டி.ஓ., நல்லதம்பி, அங்கி-ருந்த மக்களை உள்ளே சென்று, இலவசமாக மனுக்களை எழுதி கொள்ளுங்கள் என தெரிவித்தார்.ஆனால், கலெக்டர் சென்ற பின், மண்டபத்துக்கு வெளியே மனுக்கள் எழுதுவோரிடம், கிராம மக்கள் பணம் கொடுத்து மனுக்களை எழுதி வாங்கி சென்றனர்.

சர்ச் கட்ட அனுமதி தரக்கூடாது:

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி சந்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் என்பவர் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்-தனர். அதில், நாச்சினம்பட்டி வருவாய் கிராமத்தில், சேலம் டையோசிஸ் சொசைட்டி என்ற கிறிஸ்தவ அமைப்பு நிலம் வாங்கி, தங்கள் வசம் வைத்துள்ளது. இந்த நிலத்தில் கிறிஸ்தவ ஜெபக்கூடம் அல்லது புதிய சர்ச் கட்ட, தமிழக அரசிடம் அனு-மதி கோரியிருப்பதாக தெரிகிறது. இந்த நிலம் இருக்கும் இடம் அருகே, பழங்கால முனியப்பன், அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. சர்ச் கட்ட அரசு அனு-மதி வழங்கினால், மதபோதனை என்ற பெயரில் இங்குள்ள இந்-துக்கள் மதமாற்றம் செய்யப்படுவர். இதனால் மதமோதல் உரு-வாகி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். எனவே, சர்ச் கட்ட அரசு அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us