/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாயை கட்டிப்போட சொன்ன மருத்துவர் மீது தாக்குதல் நாயை கட்டிப்போட சொன்ன மருத்துவர் மீது தாக்குதல்
நாயை கட்டிப்போட சொன்ன மருத்துவர் மீது தாக்குதல்
நாயை கட்டிப்போட சொன்ன மருத்துவர் மீது தாக்குதல்
நாயை கட்டிப்போட சொன்ன மருத்துவர் மீது தாக்குதல்
ADDED : செப் 21, 2025 01:18 AM
மேட்டூர் :மேச்சேரி, சுப்ரமணியன் நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் வினோத்குமார், 39. மேட்டூர் அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். இவரது மனைவி ரம்யா, 33. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வினோத்குமார், வீட்டில் இருந்து வேலைக்கு செல்லும்போது, அருகே வசிக்கும் பாப்பா, 65 என்பவர் வளர்க்கும் நாய் குரைத்து வந்தது. அந்த நாயை கட்டிப் போடும்படி வினோத்குமார், பாப்பாவிடம் கூறினார்.
நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பிய வினோத்
குமாரை நாய் கடிக்க முயன்றது. இதுதொடர்பாக வினோத்குமார் - பாப்பா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாப்பா திட்டி, வினோத்குமார் கன்னத்தில் அடித்துள்ளார்.
தொடர்ந்து பாப்பா மகன் மாதேஸ், கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயம் அடைந்த வினோத்குமார், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். அதேநேரம், வினோத்குமார் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக, பாப்பா ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.