Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் வழி ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம் வழி ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம் வழி ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம் வழி ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

ADDED : ஜூலை 11, 2024 12:07 AM


Google News
சேலம்: சேலம் வழியே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: ஜூலை, 23 முதல் மைசூர் - துாத்துக்குடி எக்ஸ்பிரஸ்; 24 முதல், துாத்துக்-குடி - மைசூர் எக்ஸ்பிரஸ்; 25 முதல், மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்; 26 முதல், மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்-டிகள் இரண்டு இணைக்கப்பட உள்ளன. ஜூலை, 24 முதல், பெங்களூரு - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 27 முதல் கன்னியாகு-மரி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில், இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படுகின்-றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 மணி நேரம் தாமதம்திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே தினமும் இயக்கப்படும் கோவை - லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ், காலை, 8:50க்கு கிளம்பும். நேற்று மறுமார்க்கத்தில் வர வேண்டிய ரயில் தாமதமா-னது. இதனால், 4 மணி நேரம், 20 நிமிடம் தாமதமாக, மதியம், 1:10க்கு கோவையில் ரயில் கிளம்பியது. இதனால் திருப்பூர், ஈரோடு, சேலம் ஸ்டேஷன்களில் முன்பதிவு செய்து காத்திருந்த பயணியர் அவதிக்கு ஆளாகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us