/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பொறியியல் தரவரிசை பட்டியலில் தறித்தொழிலாளி மகள் முதலிடம் பொறியியல் தரவரிசை பட்டியலில் தறித்தொழிலாளி மகள் முதலிடம்
பொறியியல் தரவரிசை பட்டியலில் தறித்தொழிலாளி மகள் முதலிடம்
பொறியியல் தரவரிசை பட்டியலில் தறித்தொழிலாளி மகள் முதலிடம்
பொறியியல் தரவரிசை பட்டியலில் தறித்தொழிலாளி மகள் முதலிடம்
ADDED : ஜூலை 10, 2024 11:43 PM
வீரபாண்டி:பொறியியல் தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர்களுக்குரிய, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கூலித்தொழிலாளியின் மகள், மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டியில் வீரபாண்டி அரசு மாதிரிப்பள்ளி உள்ளது. அங்கு, அருகே உள்ள நடுவனேரி, ஆலங்காட்டுரைச் சேர்ந்த தறித்தொழிலாளி செல்வம் - சிவரஞ்சனியின் மூத்த மகள் ராவணி, சமீபத்தில் பிளஸ் 2 முடித்தார்.
அவர் பொதுத்தேர்வில், தமிழில், 98, ஆங்கிலத்தில், 95, கணிதம், இயற்பியலில் தலா, 100, வேதியியல் 99, உயிரியல், 94 என, 586 மதிப்பெண்கள் பெற்று, அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
தொடர்ந்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தார். நேற்று அதன் தரவரிசை பட்டியல் வெளியானது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்குரிய, 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில், ராவணி, 200க்கு, 199.50 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
அவரை பள்ளிக்கு வரவழைத்து தலைமை ஆசிரியர் ஜெகந்நாதன் உள்ளிட்ட ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள், பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி பாராட்டினர்.