Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மயில்களிடம் நெற்கதிர்களை காக்க வயலை சுற்றி சேலையால் வேலி

மயில்களிடம் நெற்கதிர்களை காக்க வயலை சுற்றி சேலையால் வேலி

மயில்களிடம் நெற்கதிர்களை காக்க வயலை சுற்றி சேலையால் வேலி

மயில்களிடம் நெற்கதிர்களை காக்க வயலை சுற்றி சேலையால் வேலி

ADDED : மார் 17, 2025 03:54 AM


Google News
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 375 ஏக்கரில் நெல் நடவு செய்-யப்பட்டு, அறுவடை செய்து வருகின்றனர். மயில் இனப்பெ-ருக்கம் அதிகரித்துள்ளதால் உணவு தேடி பயிர் செய்யப்படும் வயல் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றன.

அவை தானியங்கள், காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை கொத்தி, கொத்தி சாப்பிட்டு, சேதப்படுத்தி விடுகின்றன. காரம் மிகுந்த மிளகாயை கூட விட்டு வைப்பதில்லை. நெல் மணிகள் விளையும் முன்பே பதம் பார்த்து விடுகின்றன. இதனால் நெற்-கதிர்களை மயில்களிடம் இருந்து பாதுகாக்க, சமீபத்தில் விவசா-யிகள் புது, 'ஐடியா'வை கடைபிடிக்கின்றனர். அதன்படி பல வண்ணங்களில் உள்ள பழைய சேலைகளை இணைத்து, வயலை சுற்றி கட்டி விடுகின்றனர். இதை தாண்டி மயில்கள், நெல் வய-லுக்குள் செல்வதில்லை. இதுகுறித்து விவசாயிகள்

கூறுகையில், 'மயில்கள் வரப்பில் நின்று, வயல் ஓரம் உள்ள நெல் மணிகளை கொத்தி சாப்பிடும். துணி கட்டியதால் வரப்பு ஓரம் உள்ள நெல் மணிகளை சாப்பிட முடிவதில்லை' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us