/உள்ளூர் செய்திகள்/சேலம்/மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் பயன்பெறும் 33,000 விவசாயிகள்மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் பயன்பெறும் 33,000 விவசாயிகள்
மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் பயன்பெறும் 33,000 விவசாயிகள்
மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் பயன்பெறும் 33,000 விவசாயிகள்
மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் பயன்பெறும் 33,000 விவசாயிகள்
ADDED : ஜூன் 29, 2024 02:42 AM
சேலம்,: சேலம் மாவட்டத்தில் மண்வளத்தை பாதுகாத்து நஞ்சில்லா உணவு உற்பத்திக்கு வித்திடும்படி, 'மண்ணுயிர் காப்போம்' திட்டம், மத்திய - மாநில அரசுகள் பங்களிப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதில் மானாவாரி நிலங்களில் பயிர் உற்பத்தியை ஊக்குவிக்க, 3 கோடி ரூபாய்; ஆடாதோடா, நொச்சி உள்ளிட்ட பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்க்க, 47 லட்சம்; வேளாண்காடு திட்டத்தில் வேப்பங்கன்று வழங்க, 8 லட்சம்; உயிர்ம வேளாண் தொகுப்பு அமைக்க, 21 லட்சம்; மரபு சார் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்ய, 50,000; பசுந்தாள் உர விதை வினியோகம், 30 லட்சம்; மண்புழு உர உற்பத்தியை ஊக்கப்படுத்த, 24 லட்சம்; ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு அமைத்தல், 1.50 கோடி; சிறுதானிய உற்பத்தி இயக்கம், 16 லட்சம் என, 5.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விவசாயிகள் இணைய, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். பயனாளிகள் பெயரை, உழவன் செயலி அல்லது உழவர் அலுவலர் தொடர்பு திட்ட செயலி மூலம் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். மண்ணுயிர் காப்போம் திட்டம் மூலம், 33,000 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். இத்தகவலை, சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம்
தெரிவித்துள்ளார்.