ADDED : ஜூன் 01, 2024 06:33 AM
சேலம் : சேலம் மாநகர போலீசின் தலைமை இட துணை கமிஷனர் ராஜேந்திரன், அலுவலக கண்காணிப்பாளர், 3 எஸ்.ஐ., 8 எஸ்.எஸ்.ஐ., என, மாநகரில், 13 பேர் நேற்று ஓய்வு பெற்றனர்.
இவர்களுக்கு, அதற்கான சான்றிதழ்களை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வழங்கி வாழ்த்தினார். அதேபோல் மாவட்டத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 9 எஸ்.ஐ.,க்கள் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு, எஸ்.பி., அருண்கபிலன் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார். ஓய்வு பெற்றவர்களுக்கு போலீஸ் ஸ்டேஷன்கள், அவர்கள் பணியாற்றிய பிரிவுகளில், விருந்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.