/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூர் சுற்று பகுதிகளில் 219.7 மி.மீ., மழை பொழிவுமேட்டூர் சுற்று பகுதிகளில் 219.7 மி.மீ., மழை பொழிவு
மேட்டூர் சுற்று பகுதிகளில் 219.7 மி.மீ., மழை பொழிவு
மேட்டூர் சுற்று பகுதிகளில் 219.7 மி.மீ., மழை பொழிவு
மேட்டூர் சுற்று பகுதிகளில் 219.7 மி.மீ., மழை பொழிவு
ADDED : ஜூன் 03, 2024 07:07 AM
மேட்டூர் : மேட்டூர் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில், 219.7 மி.மீ., மழை பெய்துள்ளது.மேட்டூர் சுற்றுப்பகுதியில் கடந்த ஏப்ரல், மே மாத துவக்கத்தில் கோடைவெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.
கடந்த மாதம், 5 முதல் மேட்டூர் சுற்றுப்பகுதியில் கோடை மழை பெய்ய துவங்கியது. கடந்த மே, 5ல், 19 மி.மீ., 7 ல், 23.6, 8ல், 48.4, 10ல், 5.9, 11ல், 7.8, 16ல், 18.2, 19ல், 16.2, 20ல், 46.4, 21ல், 9.8, நேற்று முன்தினம் மாலை, 24.4 மி.மீ., மழை பெய்துள்ளது.கடந்த மாதம், 10ல் குறைந்த அளவாக, 5.9 மி.மீ., மழையும், கடந்த, 20ல் அதிகபட்சமாக, 46.4 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 10 முறை கோடை மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும், மேட்டூர் சுற்று பகுதியிலுள்ள கொளத்துார், மேச்சேரி பகுதியில் மழையின்றி வறண்டு காணப்பட்ட நிலங்களை, உழுது பயிர் சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.