தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 03, 2024 07:07 AM
சேலம் : சேலம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
அப்போது தி.மு.க., முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட செயலர்கள் ராஜேந்திரன், எம்.எல்.ஏ., செல்வகணபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி, சட்டத்துறை செயலர் இளங்கோ ஆகியோர் காணொலி வாயிலாக பேசினர். அப்போது, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நேரத்தில் முகவர்கள் மிக கவனமாக பணியாற்ற வேண்டும். மையங்களில் பிரச்னை ஏற்பட்டால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உடனடியாக தகவல் தர வேண்டும்.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் தபால் ஓட்டுக்கள் தேர்தல் ஆணைய விதிப்படி எண்ணப்படுவதை கண்காணிக்க வேண்டும் என, ஆலோசனை வழங்கினர்.மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மாநகர செயலர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.