/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 2 பேருக்கு கத்திக்குத்துபக்கத்து வீட்டுக்காரர் கைது 2 பேருக்கு கத்திக்குத்துபக்கத்து வீட்டுக்காரர் கைது
2 பேருக்கு கத்திக்குத்துபக்கத்து வீட்டுக்காரர் கைது
2 பேருக்கு கத்திக்குத்துபக்கத்து வீட்டுக்காரர் கைது
2 பேருக்கு கத்திக்குத்துபக்கத்து வீட்டுக்காரர் கைது
ADDED : மார் 21, 2025 01:46 AM
2 பேருக்கு கத்திக்குத்துபக்கத்து வீட்டுக்காரர் கைது
சேலம்:சேலம், போடிநாயக்கன்பட்டி அண்ணா நகர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசன், 24. இவர் வீட்டில், 'ஏசி' மாட்டியுள்ளார். அதில் இருந்து வெளியேறும் வெப்பக்காற்று, பக்கத்து வீட்டு சுவரில் படும்படி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வீட்டில் வசிக்கும் சையத் அகமது, 50, என்பவர், அசனிடம் கேட்டார். இதில் கடந்த, 18 இரவு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கத்தி, ஸ்குரூ டிரைவரால், அசனை தாக்கியுள்ளார். தடுக்க முயன்ற சையத்காதர், 34, என்பவருக்கும் வெட்டு விழுந்தது. பின் சையத் அகமது தப்பிவிட்டார். காயம் அடைந்த அசன், சையத்காதர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சூரமங்கலம் போலீசார் விசாரித்து, சையத் அகமதுவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.