/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூர் அணை பூங்காவுக்கு 10,773 பயணிகள் வருகைமேட்டூர் அணை பூங்காவுக்கு 10,773 பயணிகள் வருகை
மேட்டூர் அணை பூங்காவுக்கு 10,773 பயணிகள் வருகை
மேட்டூர் அணை பூங்காவுக்கு 10,773 பயணிகள் வருகை
மேட்டூர் அணை பூங்காவுக்கு 10,773 பயணிகள் வருகை
ADDED : ஜூன் 03, 2024 07:03 AM
மேட்டூர் : மேட்டூர் அணை மற்றும் பூங்காவுக்கு நேற்று, 10,773 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, அலுவலக விடுமுறையான நேற்று மேட்டூர் அணை பூங்காவை பார்வையிட, வழக்கத்தை விட கூடுதலாக சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நேற்று ஒரே நாளில், 10,077 பயணிகள் அணை பூங்காவையும், 463 பேர் பவளவிழா கோபுரத்துக்கு நடந்தும், 233 பேர் மின் துாக்கியிலும் சென்று அணையை பார்வையிட்டனர்.நேற்று ஒரே நாளில், 10,773 பயணிகள் அணை, பூங்காவை பார்வையிட்டதால் பொதுப்பணித் துறைக்கு மொத்தம், 57,360 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலானது. விடுமுறை நாளான கடந்த, 26ல் அதிகபட்சமாக, 11,797 பயணிகள், பயணிகள் பூங்கா மற்றும் அணையை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.