ADDED : ஜூலை 10, 2024 07:13 AM
சேலம்: சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல், ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக, கலெக்டருக்கு புகார் வந்தது.
இதனால் நேற்று கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் அதிகாரிகள், போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அதில் வாகன சான்றிதழ், இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்பட்ட ஆட்டோக்கள் கண்டறியப்பட்டன. அதன்படி, 10 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 20 ஆட்டோக்களுக்கு, 2.05 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.