/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 23, 2024 01:04 AM
சேலம் : சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட குடும்ப நல துணை இயக்கு-னரும், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனருமான ராதிகா வரவேற்றார். அரசு மருத்துவமனையின் டீன் மணி-காந்தன், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் சவுண்டம்மாள், ஆத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் யோகானந்த், மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் சுபா ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.
இதில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது, பிறப்பு விகிதத்தை குறைப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். குழந்தை பிறப்பை கட்டுப்ப-டுத்தும் சாதனம் எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், துணை சுகாதார நிலையத்திலும், அரசு மருத்துவமனையிலும் இலவசமாக உள்ளது. பெண் சிசு கொலையை தடுத்து பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை முழுமையாக அடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முறை உள்ளது குறித்தும், மூன்றாவது குழந்தை பிறப்பை தவிர்ப்பது குறித்தும் விரிவாக மருத்துவர்கள் விளக்கினர்.