/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'டவுன் பஞ்சாயத்தில் அதிகளவில் முறைகேடு' 'டவுன் பஞ்சாயத்தில் அதிகளவில் முறைகேடு'
'டவுன் பஞ்சாயத்தில் அதிகளவில் முறைகேடு'
'டவுன் பஞ்சாயத்தில் அதிகளவில் முறைகேடு'
'டவுன் பஞ்சாயத்தில் அதிகளவில் முறைகேடு'
ADDED : மார் 12, 2025 08:48 AM
ஆத்துார்: தலைவாசல் அருகே வீரகனுார் பஸ் ஸ்டாண்டில், அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வீரகனுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமை வகித்தார்.
அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:வீரகனுார் டவுன் பஞ்சாயத்தில் மக்கள் திட்டப்பணிகளில் அதிகளவில் முறைகேடு, ஊழல் நடந்து வருகிறது. கவுன்சிலர்கள், கமிஷனுக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கின்றனர். அரசு திட்டப்பணியில், 20 முதல், 50 சதவீத கமிஷன் கேட்கின்றனர். செயல் அலுவலர், இதுகுறித்து கேள்வி எழுப்ப முடியாமல் உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலர் ராமசாமி, வீரகனுார் பேரூர் செயலர் ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் வரதராஜன், காளிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.