/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மது விற்பனை சரிய காரணம் என்ன? அதிகாரி பேசிய வீடியோ 'வைரல்' மது விற்பனை சரிய காரணம் என்ன? அதிகாரி பேசிய வீடியோ 'வைரல்'
மது விற்பனை சரிய காரணம் என்ன? அதிகாரி பேசிய வீடியோ 'வைரல்'
மது விற்பனை சரிய காரணம் என்ன? அதிகாரி பேசிய வீடியோ 'வைரல்'
மது விற்பனை சரிய காரணம் என்ன? அதிகாரி பேசிய வீடியோ 'வைரல்'
ADDED : ஜூன் 30, 2024 04:03 AM
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில், 191 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் ஒவ்வொரு மாதமும், அதற்கு முந்தைய மாதத்தை விட, மது விற்பனை குறைந்த கடைகள் குறித்து கணக்கெடுக்கப்படும்.
தற்கான காரணம் குறித்து, கடை மேற்பார்வையாளர்களிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்பர். கடந்த மாதம், 25க்கும் மேற்பட்ட கடைகளில், 20 சதவீத அளவு மது விற்பனை குறைந்துள்ளது. இதனால் கடந்த, 27ல் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் டாஸ்மாக் அதிகாரிகள், கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் சேலம் மண்டல டாஸ்மாக் மேலாளர் நர்மதாதேவி பேசுகையில், ''மது விற்பனை குறைந்த கடைகளின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை குறைய காரணம் என்ன? உங்கள் கடை பகுதியில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத போதை பொருட்கள் விற்பனை நடந்தால், தகவல் தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமை. 'பல்க் சேல்ஸ்' பண்ண வேண்டாம்,'' என்றார். ஆனால், மது விற்பனை குறைந்ததற்கு காரணம் கேட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.