/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அனல்மின் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த த.வெ.க., ஆர்ப்பாட்டம் அனல்மின் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த த.வெ.க., ஆர்ப்பாட்டம்
அனல்மின் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த த.வெ.க., ஆர்ப்பாட்டம்
அனல்மின் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த த.வெ.க., ஆர்ப்பாட்டம்
அனல்மின் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த த.வெ.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2025 08:47 AM
சேலம்: சேலம், கோட்டை மைதானத்தில், த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சேலம் மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன் தலைமை வகித்தார். அதில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 10 ஆண்டுக்கு மேலாக பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினருடன், த.வெ.க.,வினர் திரண்டதால், பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், ''உண்ணாவிரதம் அறிவித்த நிலையில் போலீசார் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது. தமிழக அரசு உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 4 ஆண்டாகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் பணியாளர்கள் நிலையை புரிந்து கொண்டு, தி.மு.க., அரசு செயல்பட வேண்டும். கோரிக்கை நிறைவேறும் வரை, த.வெ.க., தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும்,'' என்றார்.
மேலும் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து, மனு அளித்தனர்.
12 நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பினர்
மேட்டூர் அனல்மின் நிலைய நுழைவாயில் உட்பகுதியில், ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள், மின்பகிர்மான வட்டம், நீர்மின்வட்ட தொழிலாளர்கள், கடந்த, 28 முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, 12ம் நாளாக போராட்டம் நீடித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, 3ம் முறை, சேலம் கோரிமேடு, தொழிலாளர் உதவி கமிஷனர் சண்பகராமன்(சமரசம்) தலைமையில் பேச்சு நடந்தது. அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கிடைத்த தகவலால், போராட்டத்தை, மாலை, 5:30 மணிக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் கைவிட்டனர். அவர்களில் ஒரு பகுதியினர், இரவு பணிக்கு சென்றனர். இதர தொழிலாளர்கள், இன்று முதல் பணிக்கு செல்வர்.