/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கரு பாலினம் கண்டறிந்த விவகாரம்; சுகாதார செவிலியை 'டிஸ்மிஸ்' கரு பாலினம் கண்டறிந்த விவகாரம்; சுகாதார செவிலியை 'டிஸ்மிஸ்'
கரு பாலினம் கண்டறிந்த விவகாரம்; சுகாதார செவிலியை 'டிஸ்மிஸ்'
கரு பாலினம் கண்டறிந்த விவகாரம்; சுகாதார செவிலியை 'டிஸ்மிஸ்'
கரு பாலினம் கண்டறிந்த விவகாரம்; சுகாதார செவிலியை 'டிஸ்மிஸ்'
ADDED : மார் 12, 2025 08:47 AM
சேலம்: சேலம், வீராணம், கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப் அருகே, பசுபதி ஸ்கேன் சென்டரில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணி, உடந்தையாக செயல்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் அம்பிகா, வனிதா, வசந்தி மங்கை, ராணி, கலைச்செல்வி, மகேஸ்வரி என, 8 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
மேலும் பாலினத்தை கண்டறிந்து கருவை கலைத்து விதிமீறி செயல்பட்டதாக, சேலம் டவுன் மேட்டுத்தெரு; பொன்னம்மாபேட்டை மற்றும் பெரியபுதுார் ஆகிய இடங்களில் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. இதுதொடர்பான அறிக்கை, தமிழக அரசு இயக்குனருக்கு, சேலம் மாவட்ட சுகாதார அலுவலர் அனுப்பினார். இதையடுத்து தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியை கலைமணியை பணி நீக்கம் செய்து, தமிழக அரசு மருத்துவ பணி இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டார்.