/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூன் 04, 2024 04:19 AM
ஆத்துார்: ஆணைவாரி நீர் வீழ்ச்சியில், அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் மலை கிராமம் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. இங்குள்ள முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர் வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. முட்டல் ஏரியில் குடில், பூங்கா, சிறுவர் விளையாட்டு மையம், படகு சவாரி வசதிகள் உள்ளன. ஆணைவாரி நீர் வீழ்ச்சி
யில் குளியல் மற்றும் உடை மாற்றும் அறைகள் உள்ளன. இதனால் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி பகுதி மட்டுமின்றி, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். தற்போது, பள்ளி விடுமுறை நீட்டித்துள்ளதாலும், கோடை மழையில், ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் அதிகளவில் குளிப்பதற்கு வருகின்றனர். நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள், நீர் வீழ்ச்சியில் குளியல் போட்டு, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'கோடை மழைக்கு பின், ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் வருகிறது. மே மாதத்தில், 15 முதல், 31 வரை, 14 ஆயிரத்து, 800 பேர் வந்ததன் மூலம், 6 லட்சம் ரூபாய் வனத்துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம், 3,780 பேர் வந்ததால், 1.40 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இன்று (நேற்று), 1,320 பேர் வந்துள்ளதால், 50 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. அவ்வப்போது மழை வருவதால், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு
வருகிறோம்,' என்றனர்.