/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலத்தில் சண்முகா கிளினிக்ஸ் திறப்பு விழா சேலத்தில் சண்முகா கிளினிக்ஸ் திறப்பு விழா
சேலத்தில் சண்முகா கிளினிக்ஸ் திறப்பு விழா
சேலத்தில் சண்முகா கிளினிக்ஸ் திறப்பு விழா
சேலத்தில் சண்முகா கிளினிக்ஸ் திறப்பு விழா
ADDED : ஜூன் 04, 2024 04:20 AM
சேலம்: சேலம் சண்முகா மருத்துவமனையின் புதிய உதயமாக, சேலம் சண்முகா கிளினிக்ஸ் (மருத்துவர் ஆலோசனை, ரத்த பரிசோதனை மற்றும் மருந்தகம்) திறப்பு விழா நேற்று முன்தினம் காலை 7:30 மணியளவில் நடந்தது. சேலம் சண்முகா மருத்துவமனை தலைவர் மரு.பன்னீர் செல்வம் மற்றும் துணைவியார் ஜெயலட்சுமி பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் கிளினிக்ஸ் திறக்கப்பட்டது. மேலும் விழாவில் முதன்மை
நிர்வாக அதிகாரி மரு.பிரபு சங்கர் மற்றும் மருத்துவ நிர்வாக இயக்குனர் மரு.பிரியதர்ஷினி மற்றும் பல்வேறு மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு ஜூன், 2 முதல், 5 வரை இசிஜி (எலக்ட்ரோ கார்டியோ கிராம்) இலவசமாக எடுக்கப்படும். மேலும் அனைத்து வகை மருந்துகளுக்கு, 20 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் வீட்டிற்கே வந்து ரத்த மாதிரிகள் எடுத்து தரப்படும்.