/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பைக் மீது கார் மோதி விபத்து மூவர் காயம்; சிறுவனிடம் விசாரணை பைக் மீது கார் மோதி விபத்து மூவர் காயம்; சிறுவனிடம் விசாரணை
பைக் மீது கார் மோதி விபத்து மூவர் காயம்; சிறுவனிடம் விசாரணை
பைக் மீது கார் மோதி விபத்து மூவர் காயம்; சிறுவனிடம் விசாரணை
பைக் மீது கார் மோதி விபத்து மூவர் காயம்; சிறுவனிடம் விசாரணை
ADDED : ஜூலை 30, 2024 02:53 AM
சேலம்: சேலம் நான்கு ரோடு அருகே, 17 வயது சிறுவன் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதில், மூன்று பேர் படுகாயங்க-ளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம், அரிசி பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின், 17 வயது மகன் தங்களுடைய காரில் தந்தையை அமர வைத்து நேற்று மாலை 3:00 மணியளவில் ஓட்டி வந்துள்ளார். 4 ரோடு அருகே வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது, அதிவேகமாக கார் மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அஸ்தம்பட்டி போலீசார் சிறுவனையும், அவரது தந்தை முத்துக்கு-மாரையும் பிடித்து விசாரித்தனர்.அப்போது, முத்துக்குமார் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் வாகனத்தை இயக்கி வந்த அவரது மகனுக்கு, 17 என்-பதும் தெரிய வந்தது. இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.