/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அணைமேடு மேம்பால பகுதியில் சர்வீஸ் சாலை இல்லாததால் அவதி அணைமேடு மேம்பால பகுதியில் சர்வீஸ் சாலை இல்லாததால் அவதி
அணைமேடு மேம்பால பகுதியில் சர்வீஸ் சாலை இல்லாததால் அவதி
அணைமேடு மேம்பால பகுதியில் சர்வீஸ் சாலை இல்லாததால் அவதி
அணைமேடு மேம்பால பகுதியில் சர்வீஸ் சாலை இல்லாததால் அவதி
ADDED : ஜூலை 18, 2024 02:12 AM
சேலம்: சேலம் அணைமேடு பகுதியில், 650 மீட்டர் நீளத்திற்கு, ரூ.92.40 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த, 11ல் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் நேரு திறந்து வைத்தார். இதனிடையே பாலத்தையொட்டி சர்வீஸ் சாலை அமைக்க பள்ளங்கள் தோண்டி ஜல்லி கொட்டி சமன்படுத்தப்-பட்டு
உள்ளது.
ஆனால் ஒருபுறம் மட்டும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக அம்மாபேட்டை, பொன்னம்மா-பேட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்களில் செல்வோர், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பாலம் கட்டி முடிக்கப்பட்டது போல், சர்வீஸ் சாலை விரை-வாக அமைப்பதற்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்-ளனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அணைமேடு மேம்பாலம் பணிகள் நடைபெற்று கொண்டு இருந்-ததால், சர்வீஸ் சாலை அமைக்கும் வழியாகத்தான் வாகனங்கள் சென்றன. வாகனங்கள் சென்று கொண்டு இருந்ததால், போக்கு-வரத்து நெரிசல் இருந்தது. சாலை அமைத்து சரியாவதற்கு, 48 மணி நேரம் தேவை. இதன் காரணமாக தான் சாலை அமைக்க முடியாமல் இருந்தது. தற்போது கட்டிமுடிக்கப்பட்ட பாலம் திறக்-கப்பட்டு விட்டது. இதையொட்டி சர்வீஸ் சாலைகளில் வாகனங்-களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. மழை பெய்து கொண்டு இருப்பதால் சாலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. மழை நின்று, மூன்று நாட்களுக்குள் சாலை அமைக்கப்பட்டு விடும். இவ்வாறு கூறினர்.