/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விபத்தில் கவிழ்ந்த வேன் தீப்பிடித்து நாசம் விபத்தில் கவிழ்ந்த வேன் தீப்பிடித்து நாசம்
விபத்தில் கவிழ்ந்த வேன் தீப்பிடித்து நாசம்
விபத்தில் கவிழ்ந்த வேன் தீப்பிடித்து நாசம்
விபத்தில் கவிழ்ந்த வேன் தீப்பிடித்து நாசம்
ADDED : ஜூலை 22, 2024 07:01 AM
சேலம், : சேலம், அழகாபுரத்தை சேர்ந்தவர் இளங்கோ. சொந்தமாக சுற்-றுலா வேன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இடைப்பாடியை சேர்ந்த பக்தர்களை பழநிக்கு அழைத்துச்சென்றார். பின் அவர்-களை, இடைப்பாடியில் இறக்கிவிட்டு நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
உத்தமசோழபுரத்தில் வந்தபோது, அங்கு மேம்பால பணிக்கு சென்டர் மீடியன் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் மீது வேன் மோதியது. இதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளா-னது. காயம் அடைந்த இளங்கோவை, மக்கள் மீட்ட நிலையில் வேன் தீப்பிடித்து எரிந்தது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் வேன் முழுதும் எரிந்து கருகிவிட்டது. கொண்டலாம்-பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.