/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின்கட்டண உயர்வை கண்டித்து 25ல் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் மின்கட்டண உயர்வை கண்டித்து 25ல் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து 25ல் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து 25ல் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து 25ல் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2024 07:01 AM
சேலம் : தே.மு.தி.க., சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட அவைத்தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட துணை செயலர் பேபி முன்னிலை வகித்தார். செவ்வாய்ப்பேட்டை பகுதி செயலர் ஆறுமுகம் வரவேற்றார்.
அதில் மாநகர் மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை முறையாக வழங்காத, தி.மு.க., அரசை கண்டித்து, வரும், 25ல், சேலம், கோட்டை மைதானத்தில் ஆர்ப்-பாட்டம் நடக்க உள்ளது. மேலும் நிறுவன தலைவர் விஜய-காந்த்தின் பிறந்தநாளை ஆக., 25ல் கொண்டாடுவதோடு, 60 வார்டுகளில் கட்சி கொடி ஏற்றி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உத-விகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செய-லர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.