/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தி.வி.க.,வினர் ஆக்கிரமித்த கட்டடம், வேலி அகற்றம் தி.வி.க.,வினர் ஆக்கிரமித்த கட்டடம், வேலி அகற்றம்
தி.வி.க.,வினர் ஆக்கிரமித்த கட்டடம், வேலி அகற்றம்
தி.வி.க.,வினர் ஆக்கிரமித்த கட்டடம், வேலி அகற்றம்
தி.வி.க.,வினர் ஆக்கிரமித்த கட்டடம், வேலி அகற்றம்
ADDED : ஜூலை 03, 2024 11:12 AM
மேட்டூர்: மேட்டூர், பொன்னகர், காளியம்மன் கோவில் பின்புறம், ரேஷன் கடை அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதன் ஒரு பகுதியை, தி.வி.க.,வினர் கையகப்படுத்தி, கடந்த, 26ல் கம்பி வேலி அமைத்தனர். அங்கு படிப்பகம் கட்ட இருப்பதாக பேனர் வைத்து, கொடி கம்பமும் நட்டனர். அதற்கு அந்த நிலத்தை, சில ஆண்டுகளாக அனுபவத்தில் வைத்திருந்த ரகுணன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்பகுதி மக்கள், பா.ம.க., நிர்வாகிகள், நேற்று முன்தினம், மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணியிடம் மனு கொடுத்தனர். அதில், தி.வி.க.,வினர் வேலி போட்டதை அகற்றாவிடில், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் என கூறியிருந்தனர்.
நேற்று, மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி தலைமையில் தாசில்தார் ரமேஷ், டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் அறிவுரைப்படி, 20க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர் நிலத்தில் அமைத்த தற்காலிக கட்டடத்தை இடித்து, கம்பி வேலியை பொக்லைன் மூலம் அகற்றினர்.